பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 326 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கடின இலக்கை சேஸ் செய்த, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜோ ரூட் தவிர மற்ற யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தனியொருவனாகப் போராடிய ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் (12) பென் டக்கெட் (38), ஜேமி ஸ்மித் (9), கேப்டன் ஜோஸ் பட்லர் (38), ஹாரி புரூக் (25), லிவிங்ஸ்டோன் (10) ஆகியோர் பொறுப்பில்லாமல் விளையாடி பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு வந்த பவுலர்கள் ஓவர்டன் (32), ஆர்ச்சர் (14) ஆகியோர் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தனர்.

ஆனால், கடைசி ஓவர்களுக்கு முன் அவர்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 9 விக்கெட்டுகளை இழ்ந்த இங்கிலாந்து அணி இன்னும் இருக்கும் ஒரு விக்கெட்டையும் பறிகொடுக்காமல் கடைசி ஆறு பந்துகளில் 13 ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது. களத்தில் இருந்த மார்க் அவுட், அடில் ரஷித் இருவரும் அஸ்மத்துல்லா வீசிய முதல் 4 பந்துகளிலும் தலா ஒரு ரன் எடுத்தனர். இதனால் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியே ஆகவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. 5வது பந்தை எதிர்கொண்ட ரஷித் இப்ராஹிம் ஜத்ரானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 317 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

சாதனை படைத்த ஜத்ரான்! சச்சின், கங்குலியை முந்தி அபார சதம் அடித்த ஆப்கன் வீரர்!

Scroll to load tweet…

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அஸ்மத்துல்லா 9.5 ஓவர்களில் 58 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அனுபவ வீரர் நபி 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஃபரூக்கி, ரஷித் கான், குல்பதீன் நைப் மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் நிலைத்து நன்றி ஆடி, 177 (146 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்) எடுத்து அசத்தினார்.

கேப்டன் ஷாஹிதி (40), அஸ்மத்துல்லா (41) ரன்கள் எடுத்து தங்கள் பங்கிற்கு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி ஓவர்களில் முகமது நபி 24 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசி ஆப்கன் அணி வலுவான ஸ்கோரை எட்டக் காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளும், அடில் ரஷித் மற்றும் ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் 177 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ஆப்கன் அணி அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி இரண்டு தோல்விகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

ரகசியக் குறியீட்டு மொழியில் பேசும் AI அசிஸ்டெண்ட்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!