ICC T20I Team Of The Year: 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி அறிவிப்பு; கேப்டனான சூர்யகுமார் யாதவ்!

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ICC announced Mens T20I Team of the Year 2023 and Suryakumar Yadav as a Captain, Arshdeep Singh, Ravi Bishnoi, Yashasvi Jaiswal included in the team rsk

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் மொத்தமாக 453 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில், இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடியது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களும் நடத்தப்பட்டது. இதில், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் என்று ஏராளமான வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து ஐசிசி சிறந்த கனவு அணியாக அறிவித்தது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 430 ரன்கள் குவித்துள்ளார். இரண்டாவது வீரராக 8 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் இடம் பெற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் இடம் பெற்றுள்ளார். அவர், 13 போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் குவித்துள்ளார். 4ஆவது இடத்தில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஸ் ரம்ஜானி, மார்க் அடைர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் நிங்கவரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டி20 அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரண், மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பெஸ் ரம்ஜானி, மார்க் அடைர், ரவி பிஷ்னாய், ரிச்சர்ட் நிங்கரவா, அர்ஷ்தீப் சிங்,

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios