Asianet News TamilAsianet News Tamil

2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்..! ஐசிசி தேர்வு செய்த லெவனில் 3 இந்திய வீரர்கள்

2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
 

icc announce test team of the year 2021
Author
Chennai, First Published Jan 20, 2022, 9:06 PM IST

2021ம் ஆண்டில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ததுடன், இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக ஐசிசி தேர்வு செய்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. 

எனவே ரோஹித் சர்மாவையும், அவருடன் இலங்கையின் திமுத் கருணரத்னேவையும் தொடக்க வீரர்களாக ஐசிசி தேர்வு செய்துள்ளது.  3ம் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர இளம் வீரரான மார்னஸ் லபுஷேனை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் தரவரிசையில் ரூட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்த லபுஷேனை 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனின் 3ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளது ஐசிசி.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இருப்பவரும், இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் தனி நபராக பங்களிப்பு செய்துவருபவருமான ஜோ ரூட்டை 4ம் வரிசையில் தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சனை 5ம் வரிசையில் தேர்வு செய்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது ஐசிசி. 

6ம் வரிசை வீரராக பாகிஸ்தானின் ஃபவாத் ஆலமையும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஷ்வினையும், ஃபாஸ்ட் பவுலர்களாக கைல் ஜாமிசன், ஹசன் அலி மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

ஐசிசி தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் அஷ்வின் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்:

திமுத் கருணரத்னே, ரோஹித் சர்மா, மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபவாத் ஆலம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், கைல் ஜாமிசன், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios