புஜாராவைப் போன்று பொறுமையாக விளையாடினால் வேலைக்கு ஆகாது; பிருத்வி ஷா!

நான் எப்படி பேட்டிங் செய்கிறேனோ அப்படியெல்லாம், அதாவது என்னைப் போன்று புஜாராவால் பேட்டிங் ஆட முடியாது என்று பிருத்வி ஷா கூறியுள்ளார்.

I cant bat like cheteshwar pujara in Test Cricket said Prithvi shaw

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் பிருத்வி ஷா. ஆனால், இவரால், இந்திய அணியில் இடம் பிடித்தாலும், அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த இடத்தை தனது திறமையால் சுப்மன் கில் பிடித்துக் கொண்டார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி அரைசதம்; இந்திய மகளிர் அணி முதல் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 பொட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், பிருத்வி ஷா இடம் பெறவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியின் மூலமாக பதிலடி கொடுத்த இங்கிலாந்து; கடைசி நேரத்தில் கை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்!

அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து பிருத்வி ஷா கூறியிருப்பதாவது: எப்போதும் அதிரடியாக விளையாட முயற்சி செய்கிறேன். ஆனால் அதிலேயும் கொஞ்சம் புத்திச்சாலித்தனமாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். என்னால், புஜாராவைப் போன்று ரொம்பவும் பொறுமையாக எல்லாம் விளையாட முடியாது.

இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!

அதே போன்று தான், அவராலும் என்னைப் போன்று அதிரடியாக எல்லாம் விளையாட முடியாது. இதுவரையில், அதிரடியாக விளையாடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இனிமேலும், அப்படி தான் விளையாட வேண்டும். இப்போது நான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் மிக முக்கியமான போட்டிகள். அது துலீப் டிராபியோ, மும்பை அணிக்கான போட்டியோ, எந்த போட்டியாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது! 

அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவது எல்லாம் வேறு வேறு. பவுலர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஷாட்டுகளைத் தான் ஆட வேண்டும். அப்படி விளையாடினால், தான் நமக்கான பந்துகளை பவுலரால் வீச முடியும். ரஞ்சி டிராபியில் 370 ரன்கள் குவித்த என்னால், ஐபிஎல் போட்டியில் என்னால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் எப்படி விளையாடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை யோசித்து விளையாட வேண்டும்.

வெள்ளை நிற பந்துகளை விட சிவப்பு நிற கிரிக்கெட் தான் அதிக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இதுதான் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios