India vs England: இந்திய அணிக்கு சாதகமாக லக்னோ மைதானம் மாற்றப்பட்டதா?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிலையில் லக்னோ மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான 29ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் லக்னோவில் தொடங்க இருக்கிறது. இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 முறையும், இந்தியா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது.
India vs England: லக்னோவில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா!
இந்த நிலையில், தான் இரு அணிகளும் 9 ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் மோதுகின்றன. இந்த நிலையில் தான் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிலையில் லக்னோ மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றப்படுள்ளதாக கூறப்படுகிறது.
India vs England: 7ஆவது இந்திய கேப்டனாக 100ஆவது போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா!
இது தொடர்பாக மைதான ஊழியர் ஒருவர் பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டிருப்பது: இந்திய – இங்கிலாந்து அணிகள் லக்னோவில் மோத உள்ளன. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிட்சுக்கு ஏற்ப பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் உள்ளது.
நடையை கட்டும் வங்கதேசம் – சாதனையோடு அரையிறுதி வாய்ப்புக்காக வீர நடை போடும் நெதர்லாந்து!
இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு சென்றபோது, இந்திய அணிய்னின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மைதானத்தின் பிட்ச் பொறுப்பாளர் சஞ்சீவ் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாட இருந்த பிட்ச்சை காண்பித்துள்ளனர். அதைப் பார்த்த டிராவிட் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக பிட்ச்சில் மட்டுமே 20 நிமிடங்கள் வரையில் மாற்றம் நடந்துள்ளது. இதனை அருகிலிருந்த பார்த்து உறுதி செய்த பின்னரே டிராவிட் அங்கிருந்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
India vs England: 9ஆவது முறையாக உலகக் கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை; வெற்றி யாருக்கு?