- Home
- Sports
- Sports Cricket
- வென்றால் மட்டுமே வாய்ப்பு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? IND vs ZIM மேட்ச் அப்டேட்ஸ்!
வென்றால் மட்டுமே வாய்ப்பு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? IND vs ZIM மேட்ச் அப்டேட்ஸ்!
IND vs ZIM T20 World Cup 2026 Match Prediction : டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில், இந்தியா பிப்ரவரி 26 அன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. டி20 போட்டிகளில் இதுவரை 13-ல் 10 போட்டிகளில் வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.
T20 World Cup 2026 - India vs Zimbabwe
டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் இந்தியா-ஜிம்பாப்வே மோதுகின்றன. முதல் போட்டியில் தோற்றதால், இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும். டி20-யில் 13 போட்டிகளில் 10-ல் வென்றுள்ள இந்தியா, ஆதிக்கத்துடன் உள்ளது.
ஜிம்பாப்வேயுடன் நடந்த போட்டி
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஜிம்பாப்வேயுடன் நடந்த ஒரே போட்டியில் இந்தியா வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் 2010-ல் ஹராரேவில் நடந்தது. அதில் இந்தியா 2-0 என தொடரை வென்றது. 2015-ல் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் 2016-ல் நடந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றாலும், இந்தியா மீண்டு வந்து 2-1 என தொடரை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
2022 டி20 உலகக் கோப்பை
2022 டி20 உலகக் கோப்பையில், மெல்போர்னில் நடந்த போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 186 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே 115 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா அபார வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்
ஜூலை 2024-ல் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. ஆனால், அடுத்த 4 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்திய அணி, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த 13 டி20 போட்டிகளில், இந்தியா 10-ல் வென்றுள்ளது. ஜிம்பாப்வே 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.