Asianet News TamilAsianet News Tamil

நடையை கட்டும் வங்கதேசம் – சாதனையோடு அரையிறுதி வாய்ப்புக்காக வீர நடை போடும் நெதர்லாந்து!

நெதர்லாந்துக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.

Netherlands will take a heroic step for the semi-final opportunity with a record rsk
Author
First Published Oct 29, 2023, 4:42 AM IST

வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து இடையிலான உலகக் கோப்பையின் 28ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 50 ஓவர்கள் வரையில் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

India vs England: 9ஆவது முறையாக உலகக் கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை; வெற்றி யாருக்கு?

இதில் வங்கதேச அணியில் மெஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து அணியில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெதர்லாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் இருக்கிறது. ஆனால், அடுத்து வரும் போட்டிகளில் நெதர்லாந்து அணி கண்டிப்பான முறையில் அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். அப்படி தோல்வி அடைந்தால் மட்டுமே நெதர்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு அமையும். மேலும், நெதர்லாந்து அடுத்த போட்டியில் தோற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கனவாகவே போய்விடும்.

 

India vs England: பயிற்சியின் போது ரோகித் சர்மாவிற்கு காயம் – ஓடி வந்து சிகிச்சை அளித்த பிசியோ!

வங்கதேச அணி விளையாடிய 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்து ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இனி வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட 8 புள்ளிகள் மட்டுமே பெறும். அப்படி பெற்றால் கூட வங்கதேச அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அமையாது. ஏற்கனவே நியூலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன.

ஒரேயடியாக சரண்டரான வங்கதேசம் – தொடர்ந்து 5ஆவது தோல்வியுடன் 9ஆவது இடம் – நெதர்லாந்துக்கு 2ஆவது வெற்றி!

இனி வரும் போட்டிகளில் ஆஸ்திரேலியா 3ல் ஒரு போட்டியில் ஜெயித்து, நியூசிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இதில் இலங்கை எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால் இலங்கை அரையிறுதி வாய்ப்பை பெறும். எது எப்படியோ, இனி வரும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரச்சின் ரவீந்திரா சதம் வீண், கடைசி வரை போராடிய ஜேம்ஸ் நீசம்;நியூசிலாந்து 5 ரன்களில் தோல்வி – ஆஸி., 4ஆவது இடம்!

இந்த தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலமாக ஒரே தொடரில் பலம் வாய்ந்த 2 அணிகளை வீழ்த்தி நெதர்லாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நெதரலாந்து 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு செல்ல இன்னமும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios