டி20 போட்டியில் ஹர்ஷல் படேல் கொஞ்சம் அதிகமாத்தான் கொடுத்திருக்காரு போல!

இலங்கை அணியின் தசுன் ஷனாகா, இந்திய அணியின் ஹர்ஷல் படேலின் ஓவரில் மட்டும் இதுவரையில் 24 பந்துகளை எதிர் கொண்டு 62 ரன்களை குவித்துள்ளார்.

Harshal Patel is Most Expensive Bowler to Sri Lankan Captain Dasun Shanaka in t20 matches

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக இஷான் கிஷான் 37 ரன்களும், ஹர்திக் பாண்டியா 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தீபக் கூடா 41 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சர்ஃப்ராஸ் கான் சதம், 162 ரன்னுக்கு அவுட்!

இதையடுத்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி களமிறங்கியது. இந்த அணியில் தசுன் ஷனாகா அதிகபட்சமாக 45 ரன்களும், குசல் மெண்டிஸ் 28 ரன்களும், கருணாரத்னே 23 ரன்களும், ஹசரங்கா 21 ரன்களும் எடுத்தனர். கடைசி ஒரு பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணியின் கருணாரத்னேயால் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

12 போட்டியிலும் தோல்வி: இதென்ன இலங்கை அணிக்கு வந்த சோதனை!

இந்த நிலையில், இதுவரை நடந்த டி20 போட்டிகளில் ஹர்ஷல் படேல் மற்றும் தசுன் ஷனாகா நேருக்கு நேர் விளையாடியதில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஷனாகா 62 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 டாட் பால் மற்றும் ஒருமுறை கூட ஷனாகாவை, ஹர்ஷல் படேல் விக்கெட் எடுத்தது கிடையாது. 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி இவ்வளவு மிஸ்டேக் செய்திருக்கா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios