நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி ஹாரி டெக்டாரின் அபார சதத்தால் 50 ஓவரில் 300 ரன்களை குவித்து, 301 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங்(5) மற்றும் பால்பிர்னி(9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஆண்டி மெக்பிரைன் 39 ரன்கள் அடித்தார். 

4ம் வரிசையில் இறங்கிய ஹாரி டெக்டார் ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் காம்ஃபெர்(43), டக்கர் (26) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல பங்களிப்பு செய்தனர். அபாரமாக ஆடிய டெக்டார் சதமடித்தார். டெக்டார் 113 ரன்களை குவித்தார்.

டெக்டாரின் சதத்தால் 50 ஓவரில் 300 ரன்களை குவித்த அயர்லாந்து அணி, 301 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயிக்க, அந்த இலக்கை நியூசிலாந்து விரட்டிவருகிறது.