இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட்டுடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்டிடம் தான் திரும்ப திரும்ப கூறிய விஷயம் என்னவென்று பகிர்ந்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் 3 அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா (17), ஷிகர் தவான்(1) மற்றும் விராட் கோலி(17) ஆகிய மூவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமாரும் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 72 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடிக்க, 5வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 133 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், ஹர்திக் பாண்டியா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட் 125 ரன்களை குவித்து, கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 

இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா - ரிஷப் பண்ட்டின் பார்ட்னர்ஷிப் தான் காரணம். அதிரடி பேட்ஸ்மேன்களான இருவரும், சூழ்நிலையை கருத்தில்கொண்டு நிதானமாகவும் தெளிவாகவும் பேட்டிங் ஆடி முதிர்ச்சியை காட்டினர். ரிஷப் - ஹர்திக்கின் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஜெயித்தது.

இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

ரிஷப்புடனான வெற்றி பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ஒரேயொரு விஷயத்தைத்தான் ரிஷப்பிடம் நான் திரும்ப திரும்ப சொன்னேன். பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை நெருக்கமாக எடுத்துச்சென்று வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று ரிஷப்பிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதனால் தான் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினோம். இங்கிலாந்து தொடர்ச்சியாக ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருக்கும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.