புத்தாண்டுக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.

2022 ஆம் ஆண்டு கடைசி சூரிய உதயம்: குடும்பத்தோடு துபாய் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டை புதிய பொறுப்புடன் ஹர்திக் பாண்டியா தொடங்குகிறார். கடைசியாக குர்ணல் பாண்டியா விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், பாண்டியா சகோதரர்கள் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: உங்களுடன் விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட எங்களை அழைத்ததற்கு நன்றி. உங்களை சந்தித்தது பெருமையாகவும், பாக்கியமாகவும் இருந்தது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

கடந்த ஐபிஎல் சீசனின் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராஜ் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. 

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது. ஒரு நாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

View post on Instagram