இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விராட் கோலி இடம் பெற்றிருந்தார். முதல் இரு ஒரு நாள் போட்டியிலும் சரிவர ஆடாத விராட் கோலி 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடி 113 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 45 ரன்கள் மட்டுமே எடுத்து தான் மோசமான பார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் நடக்கிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. இந்த நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தனது குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வருகிறார். குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு வாமிகா கோலி என்று ஒரு மகள் இருக்கிறாள். குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள கோலி 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயம் என்றும், அனுஷ்கா சர்மா கடைசி இரவு என்றும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கிரிக்கெட்டில் எப்ப, என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது! சர்ப்ரைஸ் டிக்ளேர் குறித்து மௌனம் கலைத்த பாபர் அசாம்

View post on Instagram