IPL 2023: கோலி - கம்பீர் மோதல் இதோட நிற்காது.! 15 ஆண்டு ஆகியும் ஸ்ரீசாந்தை அடிச்சதை நினைத்து வருந்தும் ஹர்பஜன்

ஐபிஎல்லில் விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையேயான மோதல் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ஐபிஎல் முதல் சீசனில் ஸ்ரீசாந்த்துடனான தனது மோதல் குறித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் வருந்துவதாக தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
 

harbhajan singh still regrets for what happened with sreesanth even after 15 years after kohli vs gambhir clash in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டிக்கு பின் விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.

விராட் கோலி - கம்பீர் இடையே ஏற்கனவே 2013 ஐபிஎல்லில் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டியின்போது களத்திலேயே இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் களத்தில் இருவருக்கு இடையே கடும் மோதல் மூண்டது.

ஐபிஎல் தொடங்கப்பட்ட பின், உள்நாட்டு வீரர்களுக்கு இடையே இம்மாதிரியான மோதல் பெரும் பரபரப்புகளை கிளப்பியிருக்கின்றன. ஐபிஎல்லில் மோதல்களுக்கெல்லாம் முதல் என்றால், அது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையேயான மோதல் தான்.  இதுமாதிரியான மோதல்களை எல்லாம் விட ஒரு படி மேலே போய் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை கிளப்பினார் ஹர்பஜன் சிங்.

ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி முடிந்த பின், இரு அணி வீரர்களும் கைகுலுக்கிய போது ஸ்ரீசாந்த்தை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் ஹர்பஜன் சிங். அப்போது அச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இன்றளவும்வீரியம் குறையாமல் பேசப்படும் விவகாரம் அது.

அந்த சம்பவம் குறித்து அதன்பின்னர் பலமுறை வருத்தம் தெரிவித்த ஹர்பஜன் சிங், கோலி - கம்பீர் இடையேயான மோதலுக்கு பின் இப்போது மீண்டும் ஒருமுறை வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், கோலி - கம்பீர் இடையேயான மோதல் இத்துடன் நிற்காது. யார் என்ன செய்தார்கள், யார் செய்தது தவறு என்றெல்லாம் பேசப்படும். இதுமாதிரியான சம்பவத்தில் ஈடுபட்டவன் என்ற முறையில் எனக்கு இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரியும். இதேமாதிரியான ஒரு மோதல் தான் 2008ல் எனக்கும் ஸ்ரீசாந்த்துக்கும் இடையே ஏற்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இன்றும், அந்த சம்பவம் குறித்து நான் வருந்துகிறேன். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும். ஆனால் நான் செய்தது தவறுதான் என்று இன்றளவும் அந்த சம்பவத்திற்காக வருந்துகிறார் ஹர்பஜன் சிங்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios