Asianet News TamilAsianet News Tamil

அந்த ஆளு முட்டாளா..? பாகிஸ்தான் முன்னாள் வீரரை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன் சிங்

இந்திய அணியை தேவையில்லாமல் கடுமையாக சாடியிருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியை ஹர்பஜன் சிங் தாறுமாறாக விமர்சித்துள்ளார். 

harbhajan singh retaliation to pakistan former cricketer basit ali
Author
England, First Published Jul 2, 2019, 10:19 AM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று தொடங்கவுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதும் உறுதியாகிவிட்டது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் நன்றாக உள்ளதால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதும் உறுதி.

இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி எஞ்சியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான அந்த போட்டியில் பாகிஸ்தான் வென்று, அதேநேரத்தில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து தோற்றால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

harbhajan singh retaliation to pakistan former cricketer basit ali

இங்கிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றிருந்தால், பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதனால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி வெல்ல வேண்டும் என விரும்பினர். அந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரே, இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி உதவ வேண்டும் என்று அக்தர் கிண்டலாக கூறுவதுபோல தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். 

harbhajan singh retaliation to pakistan former cricketer basit ali

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியோ, பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதை இந்திய அணி விரும்பாது. எனவே வேண்டுமென்றே எதிரணிகளிடம் தோற்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 

இந்நிலையில், பாசித் அலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், அவரை எது இப்படி பேசவைத்தது..? முட்டாளா அவர்..? அவர்கள்(பாகிஸ்தான் அணி) அந்த மாதிரிதான் ஆடுகிறார்கள் போல.. அதனால்தான் அவரது பார்வையும் அதே மாதிரியே இருக்கிறது என்று ஹர்பஜன் விளாசினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios