கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அணிகளை தேர்வு செய்வது வழக்கம்தான். 

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஸ்பின்னரான ஹர்பஜன் சிங், ஆல்டைம் பெஸ்ட் 11 வீரர்களை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக 2 முச்சதங்களை விளாசியுள்ள மற்றும் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ள சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவருமான ராகுல் டிராவிட்டையும், நான்காம் வரிசை வீரராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணியை அசைக்கமுடியாத சக்தியாக வைத்திருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாகவும் விக்கெட் கீப்பராக சங்கக்கராவையும் தேர்வு செய்துள்ளார். 

ஆல்ரவுண்டர்களாக ஜாக் காலிஸ் மற்றும் ஷான் போலாக்கையும் ஸ்பின்னராக வார்னேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் க்ளென் மெக்ராத்தையும் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். 

Also Read - தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள்.. தோனியின் வெறித்தனமான பேட்டிங்.. வீடியோ
 
ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவன்:

வீரேந்திர சேவாக், மேத்யூ ஹைடன், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), ஷான் போலாக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத். 

Also Read - இந்தியாவுக்கு எதிரா ஆடுறத நெனச்சாலே வெறுப்பா இருக்கு.. ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் அதிரடி