ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்து 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடாத தோனியை, மீண்டும் களத்தில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். 

3 முறை சாம்பியனான சிஎஸ்கே, அணி,கடந்த சீசனில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது. இந்நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் தீவிரத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. 

ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், தோனி, ரெய்னா, பியூஷ் சாவ்லா, முரளி விஜய் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். வலைப்பயிற்சியில் தோனி பேட்டிங் பயிற்சியின்போது பந்துகளை பறக்கவிட்ட வீடியோவை ஏற்கனவே சிஎஸ்கே அணி, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அது செம வைரலானது. 

Also Read - இந்தியாவுக்கு எதிரா ஆடுறத நெனச்சாலே வெறுப்பா இருக்கு.. ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் அதிரடி

இந்நிலையில், பயிற்சியில் தோனி தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசும் வீடியோவை ஸ்டார் ஸ்பார்ட்ஸ் தமிழ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. தோனி கடந்த 8 மாதங்களுக்கும் மேல் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் அவர் செம ஃபார்மில் இருப்பதையும் ஐபிஎல்லில் அசத்தும் முனைப்பில் இருப்பதையும் அந்த ஷாட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. அந்த வீடியோ இதோ..