Asianet News TamilAsianet News Tamil

IPL 2023:நீ பண்ணது போதும் கிளம்புப்பா; PBKS அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! GT அணியில் சீனியர் வீரருக்கு வாய்ப்பு

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

gujarat titans win toss opt to field against punjab kings in ipl 2023
Author
First Published Apr 13, 2023, 7:40 PM IST | Last Updated Apr 13, 2023, 7:40 PM IST

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மொஹாலியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் ஆடாத குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடுகிறார். ஐபிஎல்லில் நீண்ட அனுபவம் கொண்ட சீனியர் ஃபாஸ்ட் பவுலரான மோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடுகிறார். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் வழங்கிய யஷ் தயால் இந்த போட்டியில் ஆடவில்லை.

IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ககிசோ ரபாடா வந்துவிட்டதால் நேதன் எல்லிஸ் நீக்கப்பட்டுள்ளார். சிக்கந்தர் ராஸாவுக்கு பதிலாக பானுகா ராஜபக்சா சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.

IPL 2023: 2 சிக்ஸர் அடித்த தோனியை கட்டுப்படுத்தியது எப்படி..? சூட்சமத்தை சொன்ன சந்தீப் ஷர்மா

பஞ்சாப் கிங்ஸ் அணி:

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios