வரிசையாக நடையை கட்டிய குஜராத் – ஆறுதல் கொடுத்த பாரதி ஃபுல்மாலி – 126 ரன்களுக்கு சுருண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ்!
டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, லாரா வால்வார்ட் மற்றும் பெத் மூனி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில் பெத் மூனி டக் அவுட்டில் ஆட்டமிழக்க, வால்வார்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹேமலதா 4 ரன்களில் நடையை கட்ட, போப் லிட்ச்பீல்டு 21 ரன்னிலும், ஆஷ்லெக் கார்ட்னர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த பாரதி ஃபுல்மாலி 42 ரன்னிலும், கத்ரைன் பிரைஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மரிசன்னே கப், சிகா பாண்டே மற்றும் மின்னு மனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
டெல்லி கேபிடல்ஸ்:
மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலீஸ் கேப்ஸி, மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சிகா ரெட்டி, மின்னு மணி.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தயாளன் ஹேமலதா, போப் லிட்ச்பீல்டு, ஆஷ்லெக் கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கத்ரைன் பிரைஸ், தனுஜா கன்வர், ஷப்னம் முகமது ஷகில், மேக்னா சிங், மன்னட் காஷ்ய்ப்.