ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியின் வீராங்கனை ஷோபியா டங்க்லி 18 பந்துகளில் அரைசதம் எடுத்து அதிவேகமாக அரைசதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று 5 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதுவரையில் 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இன்றைய போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டன் ஸ்னே ராணா பேட்டிங் தேர்வு செய்தார்.
குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:
சபினேனி மேகனா, ஷோபியா டங்கலி, ஹர்லீன் தியோல், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, கிம் ஹர்த், ஸ்னே ராணா (கேப்டன்), தனுஜா கன்வர், மான்சி ஜோஷி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி:
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், ஹீதர் நைட், பூனம் கேம்னகர், எல்லைஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹூஜா, பிரீதி போஸ், மேகன் ஸுட், ரேணுகா தாகூர் சிங், ஷ்ரேயாங்க படீல்
அதன்படி குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியில் சபினேனி மேகனா மறும் ஷோபியா டங்க்லீ இருவரும் தொடக்க வீராங்கனையாக களமிறங்கினர். இதில், மேகனா (8) ஆரம்பத்திலே வெளியேற அடுத்து வந்த ஹர்லீன் தியோல் நிலைத்து நின்று ரன்கள் குவித்தார். ஷோபியா டங்கலி மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களை ஓட விட்டனர். ஒவ்வொருவரது ஓவரையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினர்.
மகளிர் தினத்தில் குவா குவா சத்தம்: தந்தை ரூபத்தில் பிறந்த மகள்- உமேஷ் யாதவ்விற்கு குவியும் வாழ்த்து!
ஒரு கட்டத்தில் டங்க்லி 28 பந்துகளில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னெர் 19 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். தயாளன் ஹேமலதா 16 ரன்களில் வெளியேறினார். இதே போன்று அன்னாபெல் சதர்லேண்ட் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்னே ராணா 1 ரன் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார்.
சிஎஸ்கே ஹோலி கொண்டாட்டத்திலிருந்து எஸ்கேப் ஆன தல தோனி: வைரலாகும் வீடியோ!
ஆனால், ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய ஹர்லீன் தியோல் 18 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உள்பட அரைசதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், தனது முதல் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசியாக 45 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகள் உள்பட 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.பந்து வீச்சு தரப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஹீதர் நைட் மற்றும் ஸ்ரேயாங்க படீல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மேகன் ஸூட், ரேணுகா தாகூர் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 202 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி விளையாடி வருகிறது.
