India vs Australia: முதல் முறையாக அகமதாபாத்தில் களமிறங்கும் ஆஸ்திரேலியா: இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!
இதுவரையில் அகமதாபாத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடாத ஆஸ்திரேலியா நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியின் மூலமாக முதல் முறையாக அகமதாபாத் மைதானத்தில் களமிறங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதுமட்டுமின்றி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றும்.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்
ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா தோற்றாலோ அல்லது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலோ இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு அமையும்.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்
ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கும்.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்!
நாளை நடக்கவுள்ள 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது கிடையாது.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்!
இதுவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதிய 105 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 32 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 28 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட்!
இந்த மைதானத்தில் நடந்த 14 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 247 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் 166 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
நரேந்திர மோடி மைதானம்
இந்த மைதானத்தில் நடந்த 14 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 4 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
அகமதாபாத் மைதானம்
இதுவரையில் இந்தியா விளையாடிய 14 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த மைதாத்தின் ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 338 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.