மகளிர் தினத்தில் குவா குவா சத்தம்: தந்தை ரூபத்தில் பிறந்த மகள்- உமேஷ் யாதவ்விற்கு குவியும் வாழ்த்து!
சர்வதேச மகளிர் தினத்தில் உமேஷ் யாதவ் மற்றும் தன்யா வத்வாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த உமேஷ் யாதவ், கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதே போன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமனார். இப்படி அனைத்து போட்டிகளிலும் உமேஷ் யாதவ் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ரஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணியில் இடம் பெற்று மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். 2010, 2011, 2012 என்று ஒவ்வொரு ஆண்டாக டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி உமேஷ் யாதவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனரான தனய வத்வா உடன் திருமண நிச்சயமானது.
திருமண நிச்சயமான ஒரே மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வா திருமணம் நடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா வத்வா தம்பதிக்கு 2ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், தந்தையே மகளாக பிறந்துவிட்டதாக கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உமேஷ் யாதவ்வின் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இறந்த சோகத்தையும் மறந்து, உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 13 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியிலும் உமேஷ் யாதவ் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
தோனியை தொடர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா - வெளியானது முதல் பட அறிவிப்பு