மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த சீசனில் தற்போது வரையில் 10 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் மும்பை இந்தியனஸ் மகளிர் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. இதே போன்று 2 போட்டிகளிலும் தோல்வி கண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடைசி 2 இடங்களை பிடித்துள்ளன. யுபி வாரியர்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சிஎஸ்கே ஹோலி கொண்டாட்டத்திலிருந்து எஸ்கேப் ஆன தல தோனி: வைரலாகும் வீடியோ!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், ஹீதர் நைட், பூனம் கேம்னகர், எல்லைஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹூஜா, பிரீதி போஸ், மேகன் ஸுட், ரேணுகா தாகூர் சிங், ஷ்ரேயாங்க படீல்.

குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

சபினேனி மேகனா, ஷோபியா டங்கலி, ஹர்லீன் தியோல், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, கிம் ஹர்த், ஸ்னே ராணா (கேப்டன்), தனுஜா கன்வர், மான்சி ஜோஷி

இது அவரோட ஏரியா, இவருக்குதான் பிட்ச் பத்தி எல்லாம் தெரியும், இவர தூக்கிடாதீங்க: சபா கரீம் கோரிக்கை!

இதையடுத்து இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்னே ராணா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பெத் மூனிக்கு கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்தப் போட்டியில் பேட்டிங் ஆடவில்லை. இதே போன்று அடுத்த போட்டியில் விளையாடவில்லை. இன்று நடக்கும் 3ஆவது போட்டியிலும் அவர் இல்லை. அவருக்கு என்ன ஆச்சு என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கோலி - தோனியை ஓபனிங் ஆட வச்சு நான் வேடிக்கை பார்ப்பேன் - ஆரிசிபி வீராங்கனை எலைஸ் பெர்ரி நச் பதில்!

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி வரை சென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று களமிறங்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதே போன்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திசா கசட்டிற்குப் பதிலாக பூனம் கேம்னகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.