- Home
- Sports
- Sports Cricket
- இது அவரோட ஏரியா, இவருக்குதான் பிட்ச் பத்தி எல்லாம் தெரியும், இவர தூக்கிடாதீங்க: சபா கரீம் கோரிக்கை!
இது அவரோட ஏரியா, இவருக்குதான் பிட்ச் பத்தி எல்லாம் தெரியும், இவர தூக்கிடாதீங்க: சபா கரீம் கோரிக்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் அக்ஷர் படேல் பங்கேற்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் சையது சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.

அக்ஷர் படேல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே வரும் ஜூன் 9 ஆம் தேதி லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அக்ஷர் படேல்
ஒருவேளை தோற்றால், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னதாக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சுழக்கு சாதகமான மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய நிலையில், பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்க தவறிவிட்டனர். இதன் காரணமாகத்தான் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.
அக்ஷர் படேல்
விராட் கோலி, புஜரா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். அதே போன்று கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், எஞ்சிய போட்டிகளில் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. இந்த சூழலில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
அக்ஷர் படேல்
குறிப்பாக கடைசியாக நடந்த இந்தூர் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை அவுட்டாகமல் இருந்த அக்ஷர் படேல் தனது பணியை சிறப்பாக செய்தார். எனினும் பந்து வீச்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்துவிடுவதால், அக்ஷர் படேல் இதுவரையில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
அக்ஷர் படேல்
நாளை நடக்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அக்ஷர் படேலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அக்ஷர் படேல் மட்டும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்திருந்தால் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறாது என்று முன்னாள் இந்திய வீரர் சையது சபா கரீம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அக்ஷர் படேல்
அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதால், அக்ஷர் படேலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், அவரை நாளை நடக்கும் போட்டியில் எடுக்காமல் இருக்க கூடாது. இவ்வளவு ஏன், அகமதாபாத் அவரது சொந்த ஊர். அவருக்கு அந்த மைதானத்தின் பவுண்டரி எல்லை, சூழ்நிலை எல்லாமே நல்லாவே தெரியும். அதனால், கண்டிப்பாக அவர் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.