யுபி வாரியர்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், யுபி வாரியர்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்டஸ் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நேற்றைய போட்டியின் போது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நேற்றைய போட்டியில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

சபினேனி மேகனா, ஷோபியா டங்கலி, சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, ஸ்னே ராணா, தனுஜா கன்வர், கிம் ஹெர்த், மான்சி ஜோஷி

யுபி வாரியர்ஸ் மகளிர் அணி: 

அலீசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹரீஸ், சிம்ரன் ஷேக், கிரன் நவ்கிரே, தேவிகா வைத்யா, ஷோபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி ஹயக்வாட்

RCBW vs DCW: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதுகெலும்பை உடைத்த டாரா நாரிஸ் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, ஸ்னே ராணா கேப்டனாக செயல்படுகிறார். அதுமட்டுமின்றி கிம் ஹெர்த், ஷோபியா டங்கலி, சுஷ்மா வெர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!