- Home
- Sports
- Sports Cricket
- ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!
ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!
குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர்
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக்
அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில், ஹைலீ மேத்யூ அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று ஹர்மன்ப்ரீத் கௌர் வரிசையாக பவுண்டரியாக விளாசினார். 7 பந்துகளில் 7 பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி - குஜராத் ஜெயிண்ட்ஸ்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:
யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சைகா இஷாக், ஹுமைரா கஷி.
பெத் மூனி காயம்
குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:
பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, ஜார்ஜியா வாரேஹம், ஸ்னே ராணா, தனுஜா கன்வர், மோனிகா படேல், மான்சி ஜோஷி
அமெலியா கெர்
அவர், 30 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் தன் பங்கிற்கு 24 பந்துகளில் ஒரு சிக்சர், பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
குஜராத் ஜெயிண்ட்ஸ்
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்தது. முதல் சீசனின் முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் தொடக்க விழாவின் போது நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்களுக்கு மேல் எடுத்தது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சீசனின் தொடக்க விழாவின் போது 207 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி
இதைத் தொடர்ந்து 208 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் சபினேனி மேகனா மற்றும் கேப்டன் பெத் மூனி இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷிவர் பிரண்ட் வீசினார்.
சைகா இஷாக் 4 விக்கெட்டுகள்
அப்போது, மூனி பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ஷிவர் வீசிய 4ஆவது பந்தில் ரன் அடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரது கணுக்கால் பிரண்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் வந்து பார்க்க, அவரால் நடக்க முடியாத நிலையில், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரை சக வீராங்கனைகள் கை தாங்கலாக கூட்டிச் சென்றனர்.
ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள்
காயம் காரணமாக அவர் வெளியேறினார். ஆனால், அவரைத் தொடர்ந்து வந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர்கள் ரயில் பெட்டியைப் போன்று வரிசையாக 2, 0, 0, 0, 6, 8, 1, 0, 6, 10 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி
தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா தன் பங்கிற்கு 29 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இதில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். இறுதியாக குஜராத் ஜெயிண்ட் அணி 15.1 ஓவர்களில் 64 ரன்னுக்கு 9 விக்கெட் எடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் தொடக்க விழாவின் போது நடந்த முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் எடுத்தது. இதில், கொல்கத்தா அணியில் அதிரடியாக ஆடிய மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 207 ரன்கள்
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சீசனின் தொடக்க விழாவின் போது 207 ரன்கள் எடுத்துள்ளது. 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி
இதையடுத்து, நாளைக்கு நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியும், குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன.