Asianet News TamilAsianet News Tamil

16 புள்ளிகளுடன் நம்பர் இடத்தில் குஜராத் டைடன்ஸ்: பிளே ஆஃப் ஓகே, இன்னும் 3 போட்டி இருக்கு!

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.
 

GT number 1 place in IPL Points table after won against LSG in Ahmedabad
Author
First Published May 8, 2023, 11:23 AM IST

ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று 52ஆவது போட்டி நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்துக் கொடுத்து அணியின் வெற்றிக்கு அப்துல் சமாத் வித்திட்டார்.

ஒரு 50 கூட இல்ல, ஓவர் நைட்டுல ஹீரோவான அப்துல் சமாத் - கொண்டாடி தள்ளிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

இந்த வெற்றியின் மூலமாக 8 புள்ளிகள் பெற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நம்பர் ஒன் இடத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 16 புள்ளிகள் பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும், 3 போட்டிகள் உள்ள நிலையில், 3லும் வெற்றி பெற்றாலும் சரி, இல்லை ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் சரி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

ஒரேயொரு நோபால் ஆட்டத்தையே தலைகீழே மாற்றிடுச்சு - வருத்தமாக பேசிய சஞ்சு சாம்சன்!

இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 புள்ளிகள் பெற்று உள்ளது. 3ஆவதாக லக்னோ 11 புள்ளிகள் உடன் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளன.

ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை: 

குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளிகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (13 புள்ளிகள்)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (10 புள்ளிகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (10 புள்ளிகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10 புள்ளிகள்)
மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளிகள்)
பஞ்சாப் கிங்ஸ் (10 புள்ளிகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (10 புள்ளிகள்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (10 புள்ளிகள்)
டெல்லி கேபிடல்ஸ் (10 புள்ளிகள்)

ஆரஞ்சு கேப்:

1. ஃபாப் டூ ப்ளெசிஸ்  - 511 (10 போட்டிகள்)
2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 477 (11 போட்டிகள்)
3. சுப்மன் கில் - 469 (11 போட்டிகள்)
4. டெவான் கான்வே - 458 (11 போட்டிகள்)
5. விராட் கோலி - 419 (10 போட்டிகள்)

பர்பிள் கேப்:

1. முகமது ஷமி  - 19 (11 விக்கெட்கள்)
2. ரஷீத் கான்  - 19 (11 விக்கெட்கள்)
3. துஷார் தேஷ்பாண்டே -19 (11 விக்கெட்கள்)
4. பியூஸ் சாவ்லா - 17 (10 போட்டிகள்)
5. அர்ஷ்தீப் சிங் - 16 (10 போட்டிகள்)

சஹா பேட்டிங்கை பார்த்து வியந்த விராட் கோலி - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Follow Us:
Download App:
  • android
  • ios