சிஎஸ்கேவுக்கு வாழ்த்து சொன்ன, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, குஜராத்துக்கு என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு கூகுள் சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான 16ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி தான் டாஸ் ஜெயிச்சது. இதையடுத்து முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்னை வீரர் சாய் சுதர்ஷன் 96 ரன்கள் அடித்துக் கொடுக்க, குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
ஷேம் ஷேம்…. இப்படியா பண்ணுவீங்க? ஜெய் ஷாவை விளாசும் நெட்டிசன்கள்!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருண பகவான் கை கொடுக்க போட்டி 15 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டு சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், தொடக்க வீரர்கள் டெவான் கான்வே, கெய்க்வாட், ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
ஐபிஎல் 2023 ஃபைனல்: மனைவி, மகள், டிராபியுடன் போஸ் கொடுத்த சிஎஸ்கே வீரர்கள்!
இறுதியாக கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதன் மூலமாக சிஎஸ்கே 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குஷ்பு, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
இதில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் தனது ஸ்டைலில் சிஎஸ்கேவிற்கு வாழ்த்து தெரிவித்துளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எப்போதும் போன்று டாடா ஐபிஎல் சிறப்பானது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்பி வர வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.