ஷேம் ஷேம்…. இப்படியா பண்ணுவீங்க? ஜெய் ஷாவை விளாசும் நெட்டிசன்கள்!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னையின் வெற்றிக்கு 4 பந்துகளில் 12 ரன்கள் தேவையிருந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இப்படி நடந்து கொண்டது அறுவறுக்கத்தக்க வகையில் இருந்ததாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக நேற்று நடந்தது. நேற்று தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்று முடிந்தது.
ஐபிஎல் 2023 ஃபைனல்: மனைவி, மகள், டிராபியுடன் போஸ் கொடுத்த சிஎஸ்கே வீரர்கள்!
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், விருத்திமான் சகா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீ ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது. இதில், டெவான் கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்கியா ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்களில் வெளியேற, தோனி களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜடேஜா களமிறங்கினார். கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கபட்டது. அப்போது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நடந்து கொண்ட விதம் அறுவறுக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த நிலையில், ஜெய் ஷா தவறான செய்கை செய்வது போன்று காண்பித்துள்ளார் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார். இது தொர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.