Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் நியமனம்..!

ஆஸ்திரேலிய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

george bailey appointed as chief selector of australia cricket team
Author
Australia, First Published Aug 1, 2021, 5:00 PM IST

ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த டிரெவர் ஹான்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் பெய்லி, தற்போது தேர்வுக்குழு தலைவராக பதவி உயர்வை பெற்றுள்ளார். 

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய ஜார்ஜ் பெய்லி, அந்த குறுகிய காலக்கட்டத்திலேயே சில காலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

கடைசியாக 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலிய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளிலும், 30 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

2013-14 ஆஷஸ் தொடரில் அறிமுகமான அவரது டெஸ்ட் கெரியர் அதே தொடரில் முடிந்துவிட்டது. அந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. அந்த தொடர் முழுதும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடினாலும், ஜார்ஜ் பெய்லி என்னவோ பயங்கரமாக சொதப்பிவிட்டார். அந்த 5 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். அத்துடன் அவரது டெஸ்ட் கெரியர் முடிந்தது. அதன்பின்னர் டெஸ்ட் அணியில் அவர் எடுக்கப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios