ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் புகழாரம் சூட்டிய கம்பீர்

ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

gautam gambhir opines rohit sharma is better batsman than ricky ponting for this reason

ரோஹித் சர்மா சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். 2013ம் ஆண்டு வரை ஒருநாள் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் திணறிவந்த ரோஹித் சர்மா, 2013ல் ஒருநாள் அணியில் தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பேட்டிங் ஆடி அசத்தினார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஓபனிங்கில் அசத்திய ரோஹித் சர்மா, அதே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை விளாசி மிரட்டினார்.

அதன்பின்னர் 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக 2 இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். மேலும் ஒருநாள் போட்டியில் 264 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் ஆவார்.

நீ அவசரப்படாம நின்னு ஆடி சதம் அடி.. மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னார் தோனி..! கம்பீர் நெகிழ்ச்சி

ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 237 போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 47 அரைசதங்களுடன் 9554 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் ஆடி 4 சதங்களுடன் 3853 ரன்களையும், 45 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 14 அரைசதங்களுடன் 3137 ரன்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசிய கௌதம் கம்பீர், கடந்த 4-5 ஆண்டுகளில் அதிகமான சதங்களை விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. 5-6 ஆண்டுகளுக்கு முன் இந்தளவிற்கு சீரான, நிலையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. கடந்த 6-7 ஆண்டுகளில் 20 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங்கைவிட ரோஹித் சர்மா கண்டிப்பாகவே சிறந்த பேட்ஸ்மேன். துணைக்கண்டங்களில் ரிக்கி பாண்டிங்கின் ரெக்கார்டு மோசமாக உள்ளது. ஆனால் ரோஹித் சர்மா எல்லா நாடுகளிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார் என்றார் கம்பீர்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அதிரடியாக விலகிய ஆஸ்திரேலிய அணி..! இதுதான் காரணம்

ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், 375 ஒருநாள் போட்டிகளில் ஆடி 30 சதங்களுடன் 13704 ரன்களை குவித்துள்ளார். இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய துணைக்கண்ட நாடுகளில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக வெறும் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மா அடித்துள்ள 29 சதங்களில், 13 சதங்கள் வெளிநாடுகளில் அடிக்கப்பட்டவை. அந்தவகையில், அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடிய வகையில், ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த வீரர் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios