IPL 2024: கௌதம் காம்பீர் விலக வாய்ப்பில்லை – ஆலோசகராக தொடர்வார் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் நிர்வாகம்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கௌதம் கம்பீர் தொடர்வார் என்று அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக இருந்தவர் கௌதம் காம்பீர். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 முறை சாம்பியன் டைட்டில் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
India vs Pakistan Super 4: நாய்க்குடியுடன் கால்பந்து விளையாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், லக்னோ அணியிலிருந்து கௌதம் காம்பீர் விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி லோக் சபா தேர்தல் காரணமாகவும் ஐபிஎல் தொடரிலிருந்து விலக முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நிர்வாகம் சார்பில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, லக்னோ அணியின் உலகளாவிய ஆலோசகராக காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளார் ஜஸ்டின் லங்கர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
India vs Pakistan Super Fours: பாகிஸ்தானை பார்த்தாலே உதறுது – ஓபனாக பேசிய சுப்மன் கில்!
மேலும், ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக பிரவின் தாம்பே, துணை பயிற்சியாளராக ஸ்ரீ தரன் ஸ்ரீராம் மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.