India vs Pakistan Super 4: நாய்க்குடியுடன் கால்பந்து விளையாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
கொழும்புவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலி நாய்க்குட்டியுடன் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக நாளை 3ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நடக்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சியில் இருந்த போது விராட் கோலி நாய்க்குட்டியுடன் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி நாளை கொழும்புவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டியானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
India vs Pakistan Super Fours: பாகிஸ்தானை பார்த்தாலே உதறுது – ஓபனாக பேசிய சுப்மன் கில்!
இந்த நிலையில், பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் வகையில் கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னதாக வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து விளையாடினர். இதில் விராட் கோலியும் விளையாடினார். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி ஒன்று வந்துள்ளது.
அதனை பார்த்த விராட் கோலி நாய்க்குட்டியை கூப்பிடவே, அதுவும் அவர் பின்னாடியே சென்றது. இதையடுத்து விராட் கோலி அந்த நாய்க்குட்டியை செல்லமாக கொஞ்சினார். விராட் கோலி அடித்த பந்தை அந்த நாய்க்குட்டி பிடிப்பதற்காக ஓடி சென்றது. தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
India vs Pakistan: இந்தியா எல்லாம் ஜூஜூபி மாதிரி, அப்படியே ஊதி தள்ளிடுவோம் – பாபர் அசாம்!