SL vs BAN: கடைசி வரை போராடி சதத்தை கோட்டைவிட்ட சமரவிக்ரமா; இலங்கை 257 ரன்கள் குவிப்பு; தஸ்கின் 4 விக்கெட்!

வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது சூப்பர் 4 சுற்றில் இலங்கை 257 ரன்கள் குவித்துள்ளது.

Sri Lanka Scored 257 Runs Against Bangladesh in Asia Cup Super Fours at Colombo rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.  இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

வங்கதேசம்:

முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷிமாம் ஹூசைம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், நசும் அகமது

India vs Pakistan: இந்தியா எல்லாம் ஜூஜூபி மாதிரி, அப்படியே ஊதி தள்ளிடுவோம் – பாபர் அசாம்!

இலங்கை:

பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசங்கா, தனஞ்சயா டில் சில்வா, தசுன் ஷனாகா (விக்கெட் கீப்பர்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா

இதில், இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கருணாரத்னே 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹசன் மஹ்முத் பந்தில் முஷ்பிகுமர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு குசால் மெண்டிஸ் களமிறங்கினார். அவர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். எனினும், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோரிஃபுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

Sri Lanka vs Bangladesh: எப்படியாவது ஜெயிக்க வேண்டும், ஒரு பவுலரை களமிறக்கிய வங்கதேசம் பவுலிங் தேர்வு!

இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். மெண்டிஸ் மற்றூம் சமரவிக்ரமா இருவரும் நிலையான நின்று ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் மெண்டிஸ் 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஷோரிஃபுல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்கள் சரித் அசலங்கா 10, தனஞ்சயா டி சில்வா 6, கேப்டன் தசுன் ஷனாகா 24, துனித் வெல்லலகே 3, மஹீஷ் தீக்‌ஷனா 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி வரை போராடிய சதீர சமரவிக்ரமா 72 பந்துகளில் 8 பவுண்டரி மற்றூம் 2 சிக்ஸர்கள் உள்பட 93 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார். இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் சமரவிக்ரமா 54 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Asia Cup 2023, Sri Lanka vs Bangladesh: விராட் கோலிக்கு சில்வர் பேட் பரிசாக கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சில் வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மஹ்முத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 258 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச அணி விளையாட உள்ளது.

ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios