தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி நாளை(புதன்கிழமை) நடக்கிறது. குயிண்டன் டி காக் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் டுப்ளெசிஸ் தலைமையிலான அணி டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கு தயாராகும் விதமாக இரு அணிகளிலுமே நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 


 
டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), வாண்டெர் டசன்(துணை கேப்டன்), டெம்பா பவுமா, ஜூனியர் டாலா, ஃபார்டியூன், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ட்ஜே, ஃபெலுக்வாயோ, ட்வைன் ப்ரிடோரியஸ், ரபாடா, ஷாம்ஸி, ஜார்ஜ் லிண்டே. 

இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

ஃபாஃப் டு ப்ளெசிஸ்(கேப்டன்), டெம்பா பவுமா(துணை கேப்டன்), டி ப்ருய்ன், குயிண்டன் டி காக், எல்கர், ஹாம்ஸா, கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், முத்துசாமி, இங்கிடி, நோர்ட்ஜே, ஃபிலாண்டர், டேன் பியெட், ரபாடா, ருடி செகண்ட். 

டி20 தொடர் முடிந்ததும் அக்டோபர் 2ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெல்லும் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணி தான் இந்த தொடரை வெல்லும். சொந்த மண்ணில் இந்திய அணி அபாயகரமான அணி. இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்குமே மிகவும் கடினம். காலங்காலமாக இதுதான் நடக்கிறது. எனவே இந்திய அணி தான் தொடரை வெல்லும் என கங்குலி தெரிவித்துள்ளார்.