Asianet News TamilAsianet News Tamil

அவர ஓரமா உட்கார வச்சுட்டு அவங்க 2 பேரையும் ஓபனிங்ல இறக்குங்க!! முன்னாள் தொடக்க வீரர் அதிரடி

ஃபிளிக் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் என மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டார். இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக பேட்டிங் செய்தார்.

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma
Author
India, First Published Mar 2, 2019, 6:02 PM IST

இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்வதால் மாற்று தொடக்க வீரரான ராகுலுக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை. ரோஹித் - தவான் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். நீண்டகாலமாக தொடக்க ஜோடியாக களமிறங்கிவருவதால் இவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கிறது. 

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma

தவான் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடக்கூடியவர். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து சூழல்களை நன்கு புரிந்துகொண்டு பின்னர் அடித்து ஆடக்கூடியவர். ஆனால் தவான் பெரிய இன்னிங்ஸ் ஆடமாட்டார். பெரும்பாலும் அதிகபட்சமாக 70-80 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டாகிவிடுவார். ஆனால் ரோஹித் சர்மா, சற்று தாமதமாக அடிக்க தொடங்கினாலும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் போட்டியின் போக்கே வேறு லெவல்தான்.

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma

ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்ந்தாலும், உலக கோப்பை நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அதுபோன்ற ஆடுகளங்களில் தவான் திணறுவார். எனினும் ரோஹித் - தவான் ஜோடி தான் தொடக்க ஜோடி என்றாலும், இதற்கிடையே இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது அதிரடியான மற்றும் சிறப்பான பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார். 

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma

ஃபிளிக் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் என மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டார். இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்நிலையில், ராகுல் குறித்து பேசிய காம்பீர், ராகுல் சிறந்த பேட்ஸ்மேன். அவர் உலக கோப்பைக்கு முன் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். ராகுல் பெரிய ஷாட்டுகளையும் ஆடக்கூடிய வீரர். அதேநேரத்தில் சிங்கிள் ரொடேட் செய்தும் ஆடுவார். அவர் சூழலுக்கு ஏற்றவாறு எப்படியும் ஆடுவார். ராகுல் இருக்கும் ஃபார்முக்கு ரோஹித்தும் ராகுலும் ஓபனிங் இறங்கி கோலி மூன்றாம் வரிசையில் இறங்கினால், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் எதுவுமே செய்ய தேவையில்லை. அவர்கள் மூவருமே அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார். 

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma

இந்நிலையில், அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தவானை ரிசர்வ் தொடக்க வீரராக பென்ச்சில் உட்கார வைத்து ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற கருத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் காம்பீர். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் வர்ணனையாளராக இருக்கும் காம்பீர், இந்த கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.

gambhir reiterates that kl rahul can open the batting with rohit sharma

உலக கோப்பைக்கு முன்னதாக ராகுலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. ரோஹித்தும் தவானும்தான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios