Asianet News TamilAsianet News Tamil

நம்பரலாம் நான் நம்புறதே இல்ல.. அவர தூக்குனது கொஞ்சம் கூட சரியில்ல.. காம்பீர் கடுப்பு

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 

gambhir again raised voice for rayudu
Author
India, First Published Apr 21, 2019, 5:22 PM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

gambhir again raised voice for rayudu

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

ராயுடுவின் நீக்கம், காம்பீருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாக தெரிவித்தார். ரிஷப் பண்ட்டை நீக்கியது குறித்து பெரிய விவாதம் தேவையில்லை என்பது என் கருத்து. அதேநேரத்தில் 48 ரன்கள் சராசரி வைத்திருக்கும் ராயுடுவை நீக்கியது மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம். இது உண்மையாகவே இதயத்தை நொறுக்கும் செயல் என்று வருத்தம் தெரிவித்திருந்தார். 

gambhir again raised voice for rayudu

இந்நிலையில், ராயுடுவின் நீக்கத்தை மீண்டும் சாடியுள்ளார். ராயுடுவின் நீக்கம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள காம்பீர், ராயுடுவை அவரது ஐபிஎல் ஃபார்மின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது தவறானது. அவரது திறமையைத்தான் மதீப்பீடு செய்திருக்க வேண்டும். பொதுவாக வீரர்களின் நம்பர்களின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது என்பது எனது கருத்து. திறமை என்பது நம்பருக்கு அப்பாற்பட்டது என்கிற ரீதியாக ராயுடுவுக்கு ஆதரவாக காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios