சென்னைக்கு டைட்டில் வாங்கிக் கொடுத்துவிட்டு; அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
எப்படியும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டைட்டில் வாங்கி கொடுத்துவிட்டு இன்னும் ஓராண்டு காலம் விளையாட திட்டமிட்டுள்ளேன் என்று தோனி கூறியதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாசல்படி வரை சென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கான வாசல் கதவு திறந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதே போன்று சென்னை அணியும் 13 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புக்காக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி செய்யப்படும்.
பஞ்சாப் வெற்றிக்குப் பின் அம்மாவை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா - வைரலாகும் வீடியோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட்டிச் சென்று எப்படியும் டைட்டில் வாங்கி கொடுத்துவிட்டு ஓய்வு பெறலாம் என்ற குறிக்கோளுடன் அதற்காக முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இதற்கிடையில் இந்த ஐபிஎல் தான் அவரது கடைசி ஐபிஎல் என்றும், இல்லை இல்லை அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் உங்களது கடைசி தொடரை எப்படி அனுபவித்து வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தோனியோ, இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்களா? என்று கேட்டார்.
பஞ்சாப்பை வீழ்த்தி 5ஆவது இடத்திற்கு வந்த கொல்கத்தாவிற்கு ஆப்பு வைக்கும் அணிகள்!
இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த டேனி மோரிசன், ரசிகர்களை நோக்கி, இல்லை இல்லை, அடுத்த ஆண்டும் தோனி திரும்ப வரப் போகிறார் என்ற் சுட்டிக் காட்டினார். இந்த நிலையில் சிஎஸ்கேயின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜியோ கமெண்டரியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு இன்னும் ஒரு ஆண்டு விளையாட திட்டமிட்டுள்ளேன் என்று தோனி தன்னிடம் கூறியதாக கூறியுள்ளார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னையில் நடந்த போது அப்போது அவர் ஆட்டநாயகன் விருது கொடுக்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?