பஞ்சாப் வெற்றிக்குப் பின் அம்மாவை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா - வைரலாகும் வீடியோ!
பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, தனது தாயை கட்டியணைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
பஞ்சாப்பை வீழ்த்தி 5ஆவது இடத்திற்கு வந்த கொல்கத்தாவிற்கு ஆப்பு வைக்கும் அணிகள்!
இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6ஆவது இடத்திற்கு செல்லும். கொல்கத்தாவிற்கு இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கனவாகவே போய்விடும்.
யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது அம்மா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பைக்கு வீணான ரூ.8 கோடி: ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! 5 மேட்சுல 2 விக்கெட் தான்!