Asianet News TamilAsianet News Tamil

இப்போது தெரியாது: அஸ்வின் இல்லாதது கடைசி 2 நாளில் தான் தெரியும் – ரிக்கி பாண்டிங்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாதது குறித்து ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Former Player Ricky Ponting said Ravichandran Ashwin is very important to Indian team against Australia in WTC Final
Author
First Published Jun 8, 2023, 12:16 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இது தான் ரோகித் சர்மா செய்த மிகப்பெரிய தவறு. பேட்டிங்கிற்கு சாதகமான ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அணி தான் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததே தப்பு; இதுல அஸ்வின வேறு எடுக்காம தப்பு மேல தப்பு பண்ணிய ரோகித் சர்மா!

சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படியிருக்கும் சூழலில் உலக தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். அப்படிப்பட்டவரை இந்திய அணியில் எடுக்காதது அணி மட்டுமின்றி அணி நிர்வாகமும் செய்த பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் தான் இந்திய அணி கண்டிப்பாக களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆடுகளம் மற்றும் சூழல் காரணமாக அவர் இடம் பெறவில்லை என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.

ஆனால், ஆடுகளம் கடைசி 2 நாட்களில் சுழலுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா அணியில் கவாஜா, வார்னர், டிராவிஸ் ஹெட் என்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஸ்வினை எடுக்காமல் இந்திய அணி தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பிட்ச் குறித்து நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் கூறியிருப்பதாவது:  ஓவல் பிட்ச் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் கடைசி இரு நாட்கள் நிச்சயமாக சுழலுக்கு தான் சாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தனது பார்ட்னரை சந்திக்கவே இல்லை – சுப்மன் கில் உடனான காதல், டேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அலி கான்!

இவரைத் தொடர்ந்து வர்ணனையின் போது பேசிய ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. புதிய பந்தில் ஆஸ்திரேலிய வீரர்களை ரன் எடுக்க விடாமல் தடுக்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில் அடுத்த நாட்கள் பந்து நன்றாக ஸ்பின் ஆகும். அப்படிப்பட்ட சூழலில் ஆஸ்திரேலிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய கண்டிப்பாக அஸ்வின் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

WTC Final-லில் முதல் வீரராக சதம் அடித்து சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்; 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 146 ரன்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios