விக்கெட்டே எடுக்காத சிராஜை தூக்கிட்டு குல்தீப் யாதவ்வை உள்ள இறக்குங்க – பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ்வை களமிறக்குங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் ஆலி போப்பின் சிறப்பான பேட்டிங்கால் 420 ரன்கள் குவித்தது. இதில், ஆலி போப் 196 ரன்கள் எடுத்தார்.
வேதிப் பொருள் கலந்த குடிநீரை குடித்த மாயங்க் அகர்வால் – அபாய கட்டத்தை தாண்டிய நிலையில் டிஸ்ஜார்ஜ்!
இதன் மூலமாக 231 ரன்கள வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இதே போன்று 2ஆவது இன்னிங்ஸில் சிராஜ் 7 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்த நிலையில் தான் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல் 4 மற்றும் 7 ஓவர்கள் வீசிய சிராஜிற்கு பதிலாக குல்தீப் யாதவ்வை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
Ravindra Jadeja Injury: சீரியசாக பாதிக்கப்பட்ட ஜடேஜா – எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது டவுட் தான்!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிராஜை விட கணிசமான பேட்டிங் திறமை கொண்டவர் குல்தீப் யாதவ். சிறந்த பந்து வீச்சாளரும் கூட. அக்ஷர் படேல் பேட்டிங்கில் அசத்தும் திறமை கொண்டவர் என்பதால், குல்தீப் யாதவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்றார். எனினும், அணியில் இடம் பெற்றிருந்த சிராஜ் பெரியளவில் பயன்படுத்தப்படவில்லை. ஆதலால், அவருக்குப் பதிலாக பேட்டிங்கில் ஓரளவு திறமை கொண்ட குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயத்தால் விலகியுள்ளனர். மேலும், விராட் கோலியும் அணியில் கிடையாது. மேலும், சில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.