தோனியை ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை செய்திருக்க வேண்டும் – வீரேந்தர் சேவாக்!

தோனியை ஐபிஎல் போட்டிகளில் விளையாட விடாமல் தடை செய்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

Former India player Virender Sehwag has said that Dhoni should have been banned from playing in the IPL 2019

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர்களில் ஒரு சில போட்டிகளில் தோனியை விளையாட விடாமல் தடை செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 25ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், ஹைட் நோபால் கொடுப்பதற்கு லெக் அம்பயர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, கோபமடைந்த தோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவரிடம் விவாதம் செய்தார். ஆனால், மூன்றாவது நடுவர் நோபால் கொடுத்தார். எனினும், வெளியில் இருந்த தோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ததன் காரணமாக தோனிக்கு அப்போது 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா: எங்கே, ஏன், எதற்கு தெரியுமா?

உண்மையில், இது போன்ற செய்த தோனியை குறைந்தது 3 போட்டிகளில் விளையாட தடை செய்திருக்க வேண்டும் என்றும் சேவாக் கூறியுள்ளார். மேலும், தோனியைப் போன்று மற்ற கேப்டன்களும் செய்யக் கூடும் என்பதால், அவரை அடுத்த போட்டிகளில் தடை செய்திருக்க வேண்டும். இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிட்செல் சாண்ட்னர் கடைசியாக சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் கூல் தோனி இல்லை, அது வேறு ஒருவர் – சுனில் கவாஸ்கர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios