இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது. 

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். 

மழையால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த 20 நிமிடத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மறுபடியும் ஆட்டம் தொடங்கி நடந்தது. மறுபடியும் 13வது ஓவரில் மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. 

அதன்பின்னர் மழை பெய்வதும் நிற்பதுமாக இருந்துவந்தது. அதனால் மைதானமும் ஈரமாக இருந்தது. மழை வருவதும் நிற்பதுமாக இருந்தது. தொடர்ந்து இதே மாதிரி இருந்ததால் குறிப்பிட்ட நேரம் காத்திருந்துவிட்டு ஆட்டம் ரத்தாவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.