Women's World C 2025: upமகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது. ஃபோப் லிட்ச்பீல்ட் அதிரடி சதம் விளாசினார்.
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய பவுலர்களின் பந்துகளை விளாசித் தள்ளிய ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்பீல்ட், 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அபார சதம் விளாசினார்.
ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கு
மற்றொரு வீராங்கனை எல்சி பெர்ரி 77 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் அசத்திய ஆஷ்லே கார்ட்னர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 300 ரன்களை கடக்க உதவி செய்தார். இந்தியாவுக்காக ஸ்ரீசாரிணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இறுதியில் இந்திய அணியின் ஓரளவு சிறப்பான பவுலிங்கால் 350 ரன்களை தொட முடியவில்லை.
இந்திய அணி பீல்டிங் மோசம்
இந்த பேட்டியில் நமது வீராங்கனைகளின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. கைக்கு வந்த பந்துகளை கோட்டை விட்டதால் பல பவுண்டரிகள் சென்றன. உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தி வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த இமாலய இலக்கை துரத்தி சாதனை படைத்து இறுதிப்போட்டிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூப்பர் சதம் விளாசிய ஃபோப் லிட்ச்பீல்ட்
சூப்பர் சதம் விளாசிய ஃபோப் லிட்ச்பீல்ட் கூறுகையில், ''அதிரடியாக பேட்டிங் செய்தது நன்றாக இருந்தது. எனது தனிப்பட்ட மைல்கல்லுக்காகவும், அணி 300 ரன்களைத் தாண்டி ஒரு பெரிய ஸ்கோரை எடுக்க வைத்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திய பெஸ்ஸுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் எனது பேவரிட் ஷாட்களாகும். ஏனென்றால் இந்த ஷாட்கள் அடிக்கும்போது ஃபீல்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறுதியில் சில ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என நினைக்கிறேன்'' என்றார்.
