IND vs ENG 5th Test:தேவ்தத் படிக்கல் அறிமுகம்: தரம்சாலாவில் முதல் முறையாக ரோகித் சர்மா – இங்கிலாந்து பேட்டிங்!

இந்திய அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

England won the toss and choose to bat first against India in 5th and Final Test Match at Dharamsala

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த 4 போட்டிகளின் படி இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. எஞ்சிய 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக தொடர்ந்து 17 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வருகிறது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே போன்று இந்திய அணியிலும் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். பும்ரா மீண்டும் இணைந்துள்ளார். ரஜத் படிதார் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபராஸ் கான், துருவு ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

இங்கிலாந்து:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதுவரையில் இந்த மைதானத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 2ஆவது பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2ஆவது பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் – 332 இந்தியா

குறைந்தபட்ச ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் – 300 ஆஸ்திரேலியா

அதிகபட்ச 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் – 137/10 ஆஸ்திரேலியா

குறைந்தபட்ச 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் – 106/2 இந்தியா

டெஸ்ட் போட்டி மட்டுமின்றி 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியிருக்கிறது. இதில், 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக தரம்சாலாவில் நடைபெறும் இந்த 5ஆவது டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ரோகித் சர்மா இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios