126 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து – திருப்பி கொடுத்த ஹர்மன்ப்ரீத் அண்ட் கோ!

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

England Women Scored 126 runs against India Women in 3rd T20I match at Mumbai rsk

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

U19 Asia Cup 2023: அசான் அவாய்ஸ் சதம் அடித்து சாதனை – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யு19 அதிர்ச்சி தோல்வி!

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனைகள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டர்பனில் மழை; டாஸ் போடுவதில் சிக்கல் – SA vs IND முதல் டி20 போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு!

எமி ஜோன்ஸ் 25 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கை பொறுத்த வரையில் இந்திய அணியில் சைகா இஷாக் மற்றும் பிரியங்கா பாட்டீல் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரேணுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

 

 

இந்திய மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பட்டீல், அமன்ஜோத் கவுர், டைட்டஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.

இங்கிலாந்து மகளிர் அணி:

சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், மையா பவுச்சியர், டேனியல் கிப்சன், பெஸ் கீத், மஹிமா கவுர்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios