ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் எளிதான கேட்ச்சை பிடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், எளிதான கேட்ச்சை கோட்டைவிட்டார். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டேவிட் வார்னரும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 172 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, சதத்தை நோக்கி சென்ற டேவிட் வார்னர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

அதன்பின்னரும் மார்னஸ் லபுஷேன் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். அவருடன் ஜோடி சேர்ந்து ஸ்மித்தும் ஆடிவருகிறார். லபுஷேன் சதத்தை நெருங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது. லபுஷேன் 95 ரன்களுடனும், ஸ்மித் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டத்தில் மார்கஸ் ஹாரிஸ் ஃபைன் லெக் திசையில் அடிக்க முயன்று ஷாட் ஆட, அந்த பந்தை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து ஹாரிஸை வெளியேற்றினார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்.

Scroll to load tweet…

மார்கஸ் ஹாரிஸின் கடினமான கேட்ச்சை எளிதாக பிடித்த ஜோஸ் பட்லர், அதன்பின்னர் 2 கேட்ச்களை கோட்டைவிட்டார். அதுவும் இரண்டு கேட்ச்களுமே மார்னஸ் லபுஷேனின் கேட்ச் தான். இன்னிங்ஸின் 35வது ஓவரில் லபுஷேன் 21 ரன்னில் இருந்தபோது கொடுத்த சற்று சவாலான கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட ஜோஸ் பட்லர், லபுஷேன் 95 ரன்னில் களத்தில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சையும் கோட்டைவிட்டார் பட்லர்.

Scroll to load tweet…

பட்லர் விட்ட முதல் கேட்ச்சை பயன்படுத்தி அதன்பின்னர் 74 ரன்கள் அடித்த லபுஷேன், பட்லர் தவறவிட்ட 2வது கேட்ச்சை பயன்படுத்தி இன்னும் எவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.