வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் ஆடவுள்ளது, இதற்கிடையே, அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம். இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் டெஸ்ட் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, டாவ்சன், டாப்ளி ஆகிய, கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இன்றைய போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆடுவார்கள். மூன்றாம் வரிசையில் வின்ஸும் நான்காம் வரிசையில் மோர்கனும் இறங்குவார்கள். மிடில் ஆர்டரில் டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, டாம் கரன் மற்றும் ஸ்பின்னர் அடில் ரஷீத், ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி ஆகிய 11 பேரும் களமிறங்க வாய்ப்புள்ளது. 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்),  ஜேம்ஸ் வின்ஸ், இயன் மோர்கன்(கேப்டன்), டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டேவிட் வில்லி, டாம் கரன், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.