Asianet News TamilAsianet News Tamil

ஆண்டர்சன் இல்லாத முதல் டெஸ்ட் – விளக்கம் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

England Skipper Ben Stokes gives explanation about why Fast Bowler James Anderson not part in 1st Test against India rsk
Author
First Published Jan 24, 2024, 9:37 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விராட் கோலி இடம் பெறமாட்டாரோ, அதே போன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலி, ரோகித் யாருமில்லை – 2ஆவது முறையாக சிறந்த டி20 கிரிக்கெட்டர் - ஐசிசி விருது வென்ற சூர்யகுமார் யாதவ்!

தற்போது 41 வயதாகும் ஆண்டர்சன் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில், 183 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆண்டர்சன் 690 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 32 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 10 விக்கெட்டுகள் 3 முறை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் தான் நாளை நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே செல்ல விரும்புகிறோம். அதிவேகமாக பந்து வீசக் கூடிய, அதிகம் ஸ்விங் செய்யக் கூடிய மார்க் வுட்டை அணியில் இடம் பெறச் செய்துள்ளோம். இந்த மைதானம் சுழலுக்கு சாதகமானது என்பதால் நாங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளோம்.

இந்தியா பிளேயிங் 11 எப்படி? யார் யாருக்கெல்லாம் அணியில் இடம் கிடைக்கும்? ஏன்?

மைதானம் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதமாக இருந்திருந்தால் ஆண்டர்சன் விளையாடியிருப்பார் என்று விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 131 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 31 போட்டியிலும், இங்கிலாந்து 50 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. மேலும், 50 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இதே போன்று 31 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது. ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் இந்தியா 22 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவே போட்டியில் 9ல் இந்தியாவும், 14ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஐபிஎல் 16 ஆண்டுகள் நிறைவு – ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து பிளேயிங் 11ஐ அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் ஜாக் லீச், டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios