கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஐபிஎல் 16 ஆண்டுகள் நிறைவு – ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

ஐபிஎல் தொடங்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

IPL was first born on January 24th 2008 and now its Completed 16 Years today rsk

இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் முறையாக ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம்பியனானது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடம் பிடித்தது.

2009 – டெக்கான் சார்ஜர்ஸ் – ஆடம் கில்கிறிஸ்ட்

2010 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி

2011 – சென்னை சூப்பர் கிங்ஸ் - எம்.எஸ்.தோனி

2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் காம்பீர்

2013- மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா

2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கவுதம் காம்பீர்

2015 – மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர்

2017- மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

2018 – சென்னை சூப்பர் கிங்ஸ் - எம்.எஸ்.தோனி

2019 – மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

2020 – மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

2021 – சென்னை சூப்பர் கிங்ஸ் - எம்.எஸ்.தோனி

2022 – குஜராத் டைட்டன்ஸ் – ஹர்திக் பாண்டியா

2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி

இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி வரும் மே 26 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுள்ளார். இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இது தவிர ஐபிஎல் தேதிகள் நெருங்கும் போது இன்னும் பல மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios