Asianet News TamilAsianet News Tamil

மொயின் அலி அதிரடி அரைசதம்.. அரையிறுதியில் நியூசிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 167 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
 

england set challenging target to new zealand in t20 world cup semi final
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 10, 2021, 9:26 PM IST

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி அபுதாபியில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் கட்டாயத்தின் பேரில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயத்தால் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஜோஸ் பட்லருடன் ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக களமிறங்கி ஆடினார்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், மொயின் அலி, ஒயின் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், மார்க் உட், அடில் ரஷீத்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 17 பந்தில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் செம ஃபார்மில் அதிரடியாக ஆடிவரும் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 29 ரன்னுக்கு இஷ் சோதியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் டேவிட் மலானும் மொயின் அலியும் இணைந்து பொறுப்புடன் ஆடி 3வது விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்து கொடுத்தனர். டேவிட் மலான் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் 10 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 17 ரன்கள் அடித்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய மொயின் அலி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார் மொயின் அலி.

இதையடுத்து 20 ஓவரில் 166 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 167 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயிக்க, அந்த இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios